உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் மஹா நவசண்டி யாகம்

சென்னிமலையில் மஹா நவசண்டி யாகம்

சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், நிர்வாகத்துக்கு  உட்பட்ட, சென்னி மலை மாரியம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மை, தொழில்,  விவசாயம் செழிக்க, மாரியம் மன் மற்றும் மகாலட்சுமி, சரஸ்வதி முப்பெரும்  தேவியருக்கு, மங்கள மஹா நவ சண்டி யாகம், நாளை ஆக.,1ல் காலை, 8:00 மணிக்கு  கோ பூஜை, விநாயகர் வழிபாடுடன் தொடங் குகிறது. மாலை, 5:30 மணிக்கு  புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி  பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஆக.,2ல் காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர  பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, 13 அத்யா ஹோமம், நவசண்டி யாகம், சுமங்கலி பூஜை,  கன்னியா பூஜை, மங்கள மஹா பூர்ணாஹூதி, கலச அபிஷேகம், தீபாராதனை  நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கால பைரவர் விழாக்குழு அன்பர்கள்  செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !