உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் வெட்காளியம்மன் கோவில் ஆண்டு விழா

ஓசூர் வெட்காளியம்மன் கோவில் ஆண்டு விழா

ஓசூர்: கெலமங்கலம் வெட்காளியம்மன் கோவில் ஆண்டு விழாவில், திரளான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம்  ஜீவா நகரில் உள்ள வெட்காளியம் மன் கோவிலில், 12ம் ஆண்டு விழா நேற்று  முன்தினம் (ஜூலை., 29ல்) துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு மகா கணபதி பூஜை, கங்கை பூஜை மற்றும் நேற்று (ஜூலை., 30ல்) காலை, 5:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், கோ பூஜை, 108 லிட்டர் பால் மூலம் வெட்காளியம்மன் சுவாமிக்கு ருத்ராபிஷேகம், நவக்கிரக ஹோமம், குருமாண்டபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு உலக நன்மைக்காக பூசாரி சந்திரசேகர், தீச்சட்டி ஏந்தி பட்டாளம்மன் தேர் வீதியில் ஊர்வலம் சென்றார். தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு, 21 அடி அக்னி குண்டத்தில், பூசாமி சந்திரசேகர் இறங்கினார்.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, வெட்காளியம்மன் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !