உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் ஆடி கிருத்திகையில் சண்முகநாதருக்கு சிறப்பு பூஜை

கரூரில் ஆடி கிருத்திகையில் சண்முகநாதருக்கு சிறப்பு பூஜை

கரூர்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதர் சுவாமி கோவிலில்  சிறப்பு பூஜை நடந்தது. க.பரமத்தி அடுத்த புன்னத்தில், புன்னை வனநாயகி  உடனுறை புன்னைவன நாதர் கோவில் உள்ளது. இங்குள்ள சண்முக நாதர்  சுவாமிக்கு அமாவாசை,பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்பட முக்கிய விரத  நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

அதன்படி, ஆடி கிருத்திகையை முன்னிட்டு சண்முகநாதர் சுவாமிக்கு நேற்று முன்தினம் (ஜூலை., 29ல்) சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால்குடம், காவடிகளுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !