கீழக்கரை கடற்கரையோரம் பரதர் தெருவில் அந்தோணியார் சர்ச் புதுப்பிப்பு
ADDED :2267 days ago
கீழக்கரை : கீழக்கரை கடற்கரையோரம் பரதர் தெருவில் 800 ஆண்டுகள் பழமையும், புராதன சிறப்புபெற்ற புனித அந்தோணியார்சர்ச் அமைந்துள்ளது. சர்ச்சில் புதுப்பித்தல் பணிகள்மேற் கொள்ளப்பட்டு, பொலிவு மாறாமல் புதிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. சர்ச் புதியதாக அர்ச்சிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.பிஷப் சூசை மாணிக்கம் தலைமை வகித்தார். உலக நன்மை வேண்டி, சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடந்தது. பங்குத்தந்தை சந்தியாகு ராஜா உட்படசுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.