உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி திருவிழா

வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி திருவிழா

வீரபாண்டி: மாரியம்மன் கோவிலில், இன்று 31ம் தேதி கம்பம் நட்டு, ஆடி திருவிழா தொடங் கவுள்ளது.

ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், இன்று  31ம் தேதி கம்பம் நடுதலுடன், ஆடி திருவிழா தொடங்குகிறது.

இதற்காக, ரத்தினவேல் கவுண்டர் காடு பகுதியில், தேர்வு செய்யப்பட்ட, வேப்ப மரத்துக்கு, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களால், நேற்று 30ம் தேதி அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது.

அதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில் நட, வெட்டிய வேப்ப மரத்தை ஊர்வலமாக எடுத்துவந்து,  ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள மாதேஸ்வரன் கோவிலில்  வைத்து, மரத்தை செதுக்கி, சீர் செய்தனர். இன்று 31ம் தேதி மாலை, மாரியம்மன் கோவில்  எதிரேவுள்ள பாவடி பகுதியிலிருந்து, கம்பத்தை மஞ்சள் குங்குமம் பூசி,  அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் நட்டு, ஆடி திருவிழா  தொடங்கவுள்ளது. இதையொட்டி, தினமும் இரவு, உற்சவர் மாரியம்மனை,  பல்வேறு வித அலங்காரங்களில் தயார்படுத்தி, வீதியுலா வரச்செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !