உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி : நிறைமதி கிராமத்தில் மழை வேண்டி பக்தர்கள், மாரியம்மன்  கோவிலுக்கு பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த  நிறைமதி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, மழை வேண்டி வருண பூஜை  நடத்தினர். 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊரின் முக்கிய  தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.  தொடர்ந்து கோவிலில் சடையப்பர் மற்றும் அய்யனார் சுவாமிகளுக்கு ஊரணி  பொங்கல் வைத்து படையலிட்டு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !