நெல்லை டவுன் காஞ்சி சங்கர மடத்தில் வசந்த நவராத்திரி
ADDED :4966 days ago
திருநெல்வேலி : நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி விழா துவங்கி நடந்துவருகிறது. நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெரு காஞ்சி சங்கர மடத்தில் வசந்தி நவராத்திரி விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், நவபாரண பூஜை, சுபாஷினி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. மாலையில் 5 மணிக்கு சிறப்பு பஜனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை காஞ்சிமடம் மேலாளர் அனந்தகிருஷ்ணன், சுந்தரம், ஜெயந்திரன் மணி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.