உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் பங்குனி பொங்கல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் விழா!

சாத்தூர் பங்குனி பொங்கல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் விழா!

சாத்தூர் :சாத்தூர் மாரியம்மன்,காளியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் நாட்கால் நாட்டுதல் விழா நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. சாத்தூர் மாரியம்மன்,காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா, பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவில் மண்டகப்படியார்கள் சார்பில் நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், செய்யப்படும்,மேலும் உற்சவ மாரியம்மன் சிம்மவாகனம், ரிஷபவாகனம், குதிரைவாகனங்களில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தினமும் வலம் வரும். தினசரி கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்ரல் 1 தேதி இரவில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரவு 8 மணிக்கு சாத்தூர் வைப்பாற்றில் இருந்து கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சியும்,இரவு 8மணிமுதல் 1 மணிவரை மாரியம்மன் கொலுவிருக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்,பின்னர் காளியம்மன் கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறவுள்ளது. அம்மனுக்கு காப்பு கட்டுதல்,நாட்கால் நாட்டுதல் விழாவில் பரம்பரை கோவில் தர்மகர்த்தா இசக்கிமுத்து, மண்டகப்படிதாரர்கள்.பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !