உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி அருகே, 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்

அவிநாசி அருகே, 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்

அவிநாசி:அவிநாசி அருகே, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை, புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண் டுமென, பக்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி, பெரியகாட்டுப்பாளையத்தில், பழமை வாய்ந்த வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் கும்பாபி ஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

கோவிலின் சிறப்பு குறித்து, திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:அவிநாசி அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகளை பார்க்கும் போது, கோவில் கட்டப்பட்டு, 700 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். கருவலுா ரில் உள்ள பெருமாள் கோவிலுக்கும், இக்கோவிலுக்கும் தொடர்பு இருக்கலாம்.கோவிலில் உள்ள துளசி மாடத்தில், நான்கு சிற்பங்கள் உள்ளன. அதில், பெருமாள், சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். கண்ணன், புல்லாங்குழல் இசைத்தபடியும், காலிங்கநர்த்தன அவதாரத்தில், கையில் பாம்பு பிடித்தபடியும், மூர்த்தி சிலையும் உள்ளது.சிலைகள் அனைத்தும், திருமாலின் அவதாரங்களாக உள்ளன. ஆறு மற்றும் நீர்நிலை உள்ள பகுதியை அப்பகுதி மக்கள், புனிதமாக கருதியுள்ளனர். நீர்நிலை உள்ள இடங்களில் கோவில் கட்டியுள்ளனர்.

இதனால், கோவிலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், புனிதமும், அங்குள்ள நீர் நிலைக்கும் கிடைக்கும் என்பதே அதன் நோக்கம். பழமை வாய்ந்த இக்கோவில் கூட, நீர்நிலை நிறைந்த அழகிய இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கிராம மக்கள் கூறுகையில், இந்த கோவிலில், 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், சில திருப்பணிகள் செய்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அற நிலையத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். துறை ரீதியான ஒப்புதல் கிடைத்தவுடன், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !