உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி, : கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில், ஆடி அமாவாசையை  முன்னிட்டு, முன் னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி  நடந்தது.இந்துக்களின் புனித தினங்களில் ஒன் றான ஆடி அமாவாசையன்று,  தர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி  அடையும், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.ஆடி அமாவாசை  தின மான நேற்று ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு  தர்ப் பணம் செய்தனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் ஆடி  அமாவாசையை முன்னிட்டு, முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி  நடந்தது. இதில், ராஜா சாஸ்திரி தலைமையில் கோ பூஜை செய்து,  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !