உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், கோவிலில் டி.ஜி.பி., சுவாமி தரிசனம்

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், கோவிலில் டி.ஜி.பி., சுவாமி தரிசனம்

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், போலீஸ் டி.ஜி.பி., சுந்தரி நந்தா  சுவாமி தரிசனம் செய்தார்.

டில்லிக்கு பணியி்ட மாற்றம் செய்யப்பட்ட புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., சுந்தரி  நந்தா, நேற்று 31ல், மாலை 4.40 மணிக்கு, பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான  மூவநாதர் கோவிலுக்கு வந்தார்.அவருக்கு, பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், பொங்கு சனி உள்ளிட்ட  சுவாமிகளை தரிசனம் செய்து, கோவிலை வலம் வந்த சுந்தரிநந்தா, தல வரலாறு  குறித்து கேட்டறிந்தார். மாலை 5.25 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து,  புறப்பட்டுச் சென்றார்.

இதனை தொடர்ந்து, தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள தனியார்  ஓட்டலில் போலீஸ் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், முதல்வர்  நாராயணசாமி, அமைச்சர்கள் கந்த சாமி, ஷாஜகான், புதுச்சேரி தலைமை நீதிபதி  தனபால், துறை செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு,  டி.ஜி.பி., சுந்தரி நந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !