சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2291 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு நடந்த இப்பூஜைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இராம.அருணகிரி தலைமை வகித்தார்.சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். பூஜையில்தேவஸ்தான அதிகாரி ஜெய்கணேஷ் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர். மாலை 4:00 மணிக்கு விநாயகர், முருகன், அஷ்டலெட்சுமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6:30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கிய விழா யஜமானர் சங்கல்பம், லட்சுமி பூஜை, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.