தேவிபட்டினம் ஆடி அமாவாசையில் நவபாஷாணத்தில் தரிசனம்
ADDED :2291 days ago
தேவிபட்டினம்: ஆடி அமாவாசையில் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக முன்னோர்களுக்கு திதி, தர்பணம் உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்வதற்கு அதிகாலை முதல் நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள் கடலில் நீராடி பின் நவகிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக இந்து அறநிலையத்துறை சார்பில் கம்புகளால் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.