உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திருவதிகை கோவிலில் பூவங்கி சேவை

பண்ருட்டி திருவதிகை கோவிலில் பூவங்கி சேவை

பண்ருட்டி : திருவதிகை ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாத சுவாமி கோவிலில் ஆடி  3ம் வெள்ளியை முன்னிட்டு நாளை மூலவர் தாயார் பூவங்கி சேவையில்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாத சுவாமி கோவிலில்  நாளை 2ம் தேதி ஆடிமாதம் 3ம் வெள்ளியை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு  மூலவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:30 மணிக்கு தீபாராதனை  நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு மூலவர்  ரங்கநாயகி பெரிய தாயார் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார்.

இரவு 7:00 மணிக்கு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கிறது. இரவு 9:45 மணியளவில் ஏகாந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !