கம்மாபுரம் அடுத்த கருப்புசாமி கோவிலில் செடல் உற்சவம்
ADDED :2293 days ago
கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த இருப்பு கருப்புசாமி கோவிலில், ஏராளமானோர் வாகனங்களில் செடலணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.செடல் உற்சவத்தையொட்டி, கடந்த 28ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடந்தது.
தினமும், காலை மாலை கருப்புசாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, நேற்று (31ம் தேதி) காலை 9:00 மணியள வில் திருகுளத்திலிருந்து ஏராளமானோர் செடலணிந்து, 16 அடி அலகு குத்தி, வாகனங்களில் பறக்கும் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.