அத்தி வரதர் கையில் மா சு ச: என்ன அர்த்தம்?
ADDED :2294 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 31 நாட்கள் சயன கோலத்தில் அருள்பாலித்து வந்த அத்தி வரதர், நேற்றிலிருந்து நின்ற கோலத்தில், அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்தில், அத்தி வரதரின் வலது கையில் பொறிக்கப்பட்டுள்ள, மா சு ச: என, மூன்று எழுத்துகளை பார்த்த பக்தர்கள், அதன் அர்த்தம் புரியாமல் குழம்பினர். மா சு ச: எழுத்துகள் குறித்து, கோவில் செயல் அலுவலர், தியாகராஜனிடம் கேட்டபோது, என்னை சரணடை; உனக்கு மோட்சம் தருவேன் என, பொருள் தரும். இந்த எழுத்துகள், கீதை உபதேசத்தில் உள்ளன, என்றார்.