மதுரை மீனாட்சி அம்மன் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிமுளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்ஸவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை. கோயில் அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று(ஆக., 1) காலை 10:30 முதல் 11:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் ஆக., 10 வரை தினமும் காலை, மாலையில் ஆடி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார். ஆக.,7 ல் இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்ஸவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நிரல்:
01.08.2019: தருமை ஆதீன நாதஸ்வர கலாநிதி. திருக்கடையூர் திரு. டி.எ.பாலசுப்பிரமண்யன் தருமை , ஆதீன மேளகர்த்தா கலாநிதி திரு. டி.எ. சுகுமார் அவர்கள் குழுவினர்.
02.08.2019: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்கள், “நாதஸ்வர சுகநாத இளவரசர்கள்” திரு. டி.கே.கே. காந்தி திரு. டி.கே.கே. நேரு, அவர்கள் குழுவினர்.
03.08.2019: பெருவங்கிய கலையரசர்கள் டெல்லி சங்கீத நாடக அகாடமி, யுவபுரஸ்கார் சின்னமனூர் திரு அ. விஜயகார்த்திகேயன், இடும்பாவனம் திரு.வே. பிரகாஷ் இளையராஜா அவர்கள் குழுவினர்.
04.08.2019 : நாதஸ்வர இளம் இளவரசர்கள் திருப்பாம்புரம் இளைய சகோதரர்கள் , திரு. டி.எஸ்.என். குஞ்சிதபாதம் திரு. டி.எஸ்.என். சேஷகோபாலன் அவர்கள் குழுவினர்
05.08.2019 :மங்கள இசை தமிழக அரசின் கலை இளமணி பெருவங்கிய இளவரசர், திருக்கடையூர் திரு. டி.எஸ். எம். உமாசங்கர் அவர்கள் குழுவினர்
06.08.2019: திருமெய்ஞானம் திரு. டி.பி. நடராஜசுந்தரம் பிள்ளை குமாரர், பெருவங்கிய இளவரசு சுககான ஜோதி “கலைஞான சிகரங்கள்” திருமெய்ஞானம் திரு. டி.பி.என். இராமநாதன், பாண்டமங்கலம் திரு. பி.ஜி. யுவராஜ் அவர்கள் குழுவினர்.
07.08.2019 : கேரளா ஒச்சிரா நாதஸ்வர வித்வான்கள், திரு. வி. சிவதாஸன்,திருமதி. எஸ். பிரசன்னா அவர்கள் குழுவினர்
08.08.2019 : நாதஸ்வர கலாரத்னா திருப்பரங்குன்றம், திரு.கே. அம்மையப்பன், திரு. கே.ஏ. வேல்முருகன் அவர்கள் குழுவினர்.
09.08.2019 : மதுரை அ/மி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆஸ்தான நாதஸ்வர வித்வான் வடுகபட்டி , திரு. என். ராமகிருஷ்ணன் திரு. எம். மாரிச்செல்வம் அவர்கள் குழுவினர்.
10.08.2019 : கருப்பட்டி சகோதரர்கள் மதுரை அ/மி கூடலழகர் பெருமாள், திருக்கோயில், ஆஸ்தான நாதஸ்வர வித்வான் திரு. ஜி. ராஜேந்திரன் மதுரை அ/மி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆஸ்தான நாதஸ்வர,வித்வான் திரு.ஜி.கணேசன். திரு. ஆர். வெங்கடேசபிரபு அவர்கள் குழுவினர்.