உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டையன்பட்டி அம்மனுக்கு பால்குடம்

வேட்டையன்பட்டி அம்மனுக்கு பால்குடம்

சிங்கம்புணரி: வேட்டையன்பட்டி அன்னை காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை அரணத்தங்குண்டு பிள்ளையார் கோயிலில் இருந்து ஏராளமானோர் பால்குடங்களை சுமந்து வேட்டையன்பட்டி திண்டுக்கல் சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 5:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கினர். இன்று மாலை திருவிளக்கு பூஜையும், இரவு 8:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !