காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே கழிவுநீர்:மக்கள் அவதி
ADDED :2292 days ago
காஞ்சிபுரம்,:காமாட்சி அம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி தடுப்பு வழியே கழிவுநீர் வருவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சுற்றிலும், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில், பணிகள் நடந்தன.அதில், கோவிலை சுற்றி, மூன்று இடங்களில், 70 லட்சம் ரூபாயில், தானியங்கி தடுப்புகள் அமைக்கப்பட்டன.மின்சாரம் மூலம் இயக்கப்படும் அந்த கருவியின் உள்ளே, கழிவுநீர் கால்வாய் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால், தானியங்கி தடுப்பு இயக்கப்படும்போது, கழிவுநீரும் சேர்ந்து வெளியில் வருகிறது; அப்போது, துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.மேலும், மின்சாதன கருவிகள் உள்ளே, கழிவு நீர் புகுந்துள்ளதால், மின் கசிவு ஏற்பட்டு, ஆபத்தை ஏற்படுத்தலாம் என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.