உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊவேரி செல்லியம்மன் கோவிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தணும்

ஊவேரி செல்லியம்மன் கோவிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தணும்

ஊவேரி:செல்லியம்மன் கோவிலுக்கு, பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மணியாட்சி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த, மணியாட்சி கிராமத்தில், கிராம தேவதை என, அழைக்கப்படும், செல்லியம்மன் கோவில் உள்ளது.வயல் நடுவே உள்ள இந்த கோவிலில், ஆடி மற்றும் சித்திரை மாதங்களில், திருவிழா நடைபெறும்.எனினும், சாலையில் இருந்து, வயலில் இருக்கும் கோவிலுக்கு செல்ல முறையான வழி இல்லை. இதனால், கோவி லுக்கு செல்வோர், ஒத்தையடி பாதையில் செல்கின்றனர். மழைக்காலத்தில், கோவிலுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.எனவே, செல்லியம்மன் கோவிலுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, மணியாட்சி கிராமத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !