உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்மிடிப்பூண்டி தேவி கருமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி தேவி கருமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி:மண்டலாபிஷேகத்தினை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி தேவி கருமாரியம் மனுக்கு, பாலாபிஷேகம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி அடுத்த, பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடந்தன.மண்டலாபிஷேக பூர்த்தி நாளான நேற்று 1ல், அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. கிராமத்து மக்கள், தலையில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர் ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !