வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2291 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அடுத்த ரங்கநாதபுரம் வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று காலை விநாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.இரவு 10:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.