உத்தரகோசமங்கை அருகே முத்துமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :2424 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரி காமராஜர் திடலில் உள்ள நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பூஜைகளை பூஜகர் மாரிமுத்து செய்தார். ஏற்பாடுகளை மக்கள் பணி இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.