சேத்தியாத்தோப்பு அருகே ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா
ADDED :2335 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடந்தது.
காலையில் மூலவர் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பஞ்சா மிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 27 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. துளசி மாலை, மலர் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது.அன்னதானம் காலை 11.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை நடந்தது. அனைத்து பூஜைகளையும் கோவில் அர்ச்சகர் பாலாஜி செய்திருந்தார்.