பல்லடம் அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :2279 days ago
பல்லடம்:பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு துவங்கியது.மழை பொழியவும், திருமண தடை நீங்கி திருமணம் நடக்கவும், விவசாயம் சிறக்கவும், கல்வி, தொழில் வளங்கள் சிறந்து விளங்குவதற்காகவும், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
முன்னதாக, காலை, 5 மணிக்கு, முருக பெருமானுக்கு சிறப்பு வேள்வி நடைபெற்றது.தொடர்ந்து, அபிஷேகம், மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று, மழை வேண்டி சிறப்பு வேள்வி நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.