உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் ஜெருசலேம் பயணம் நிதியுதவிக்கு அழைப்பு

திருப்பூரில் ஜெருசலேம் பயணம் நிதியுதவிக்கு அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித  பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம்  ரூபாய் நிதியுதவி வழங்கப் படுகிறது. விண்ணப்பப் படிவங்களை கலெக்டர்  அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம்.  இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்  ஆகிய வற்றை www.​b​cm​b​cmw.tn.gov.in  என்ற இணையதள  முகவரியில் பதிவிறக் கம் செய்தும் பயன்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபாலில், ”ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் -2019- 20’ என்று குறிப் பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டடம், (முதல் தளம்), சேப்பாக்கம், சென்னை -- 5 என்ற முகவரிக்கு ஆக., 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும், என மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !