உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை கோயில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்

மானாமதுரை கோயில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்

மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந் தவல்லி - சோமநாதர் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று (ஆக., 2ல்) கொடியே ற்றத்துடன் துவங்குகிறது.

மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடிமாதம்  தொடர்ந்து 10 நாட்கள் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு இன்று (ஆக., 2ல்) காலை 9:45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடித்தபசு  திருவிழா துவங்குகிறது.

விழா நாட்களில் சுவாமிகள் அன்னம், கமலம், யானை, கிளி, விருஷம், காமதேனு,  குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு ஆக., 11ந்தேதி நடைபெற உள்ளது. 12ந்  தேதி சந்தனக்காப்பு உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை ஸ்தானீகர் அழகிய சுந்தரபட்டர், தேவஸ்தான மேலாளர் இளங்கோ,  கண்காணிப்பாளர் சரவணன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !