உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு கோலாகலம்: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்

ஆடிப்பெருக்கு கோலாகலம்: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்

மதுரை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் ஆற்றங்கரை, கடற்கரையிலும் கொண்டாடினர். ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர்.

திருச்சியில் தண்ணீர் இல்லை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சி மக்கள் தேங்கி கிடந்த நீரில் பூஜைகள் செய்தனர். ஆடிப் பெருக்கு தினத்தில் செய்யக்கூடிய எந்தவொரு நல்ல செயலுக்கும் புண்ணியம் பெருகும். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

மக்கள், குறிப்பாக புது மணத்தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் படையலிட்டு, காவிரி அன்னையை பெண்கள் வழிப்பட்டனர். புதிய மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். இது போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதி க்கரைகளில் மக்கள் பூஜை செய்தனர். தம்பதிகள் மஞ்சள் கயிறு , புது தாலி மாற்றி கொண்டனர். அரிசி, பழம், பால் என படையலிட்டு பூஜை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !