உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்தவர்ஷினி கோவிலில் திருவிளக்கு பூஜை

அமிர்தவர்ஷினி கோவிலில் திருவிளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளாதி சின்ன தொட்டி பாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமை மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனையுடன், திருவிளக்கு பூஜை துவங்கியது. இதில், கல்வியில் மேன்மை கிடைக்கவும், தோஷங்கள் விலகவும், வியாதிகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வியாபாரத்தில் மேன்மை கிடைக்க வேண்டி உட்பட, 10 வேண்டுதல்களை முன்வைத்து திருவிளக்கு பூஜை நடத்தினர். கும்பகோணம் வேத விநாயகர் கோவில் அர்ச்சகர் ஹரிஷ், திருவிளக்கு பூஜையை நடத்திக் கொடுத்தார். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !