திருவாடானை கோயில் சுவற்றில் விரிசல்: பக்தர்கள் கவலை
ADDED :2329 days ago
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பிரகார சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிநேகவல்லி அம்மன் சன்னதிக்கு செல்லும் முகப்பின் மேற்பகுதி சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் உள்ள சிலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில் பழமையான இக்கோயிலில் பெரும் பாலான
இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலின் மேற்பகுதியில் தட்டோடுகள் பெயர்ந்து விட்டதால் மழை நீர் உள்ளே இறங்கி தேங்கியுள்ளது.
சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு இடையே செடிகள் வளர்வதால் நாளுக்கு நாள் விரிசல் விரிவடைந்து பாதிப்பு அதிகமாகிறது. உடனடியாக கோயில் மராமத்து பணிகளை துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.