உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரவிழா

சென்னை பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரவிழா

சென்னை:பெசன்ட் நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருவிழாவை  முன்னிட்டு, அராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு, சிறப்பு அலங்காரம் நாளை  (ஆக., 3ல்)நடக்கிறது.

பெசன்ட்நகர், ஆறாவது குறுக்கு தெருவில், ரத்னகிரீஸ்வரர் கோவில்  அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆஷாட மகோற்சவம், ஜூலை 31ல், விநாயகர்  பூஜையுடன் துவங்கியது. அன்று, ஸ்ரீசக்ர, சிவ சக்ர ஸ்தாபனம் நடந்தது.  உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஆக., 1ல்), ஸ்ரீவித்யா கட்கமாலா ஜபம் பாராயணம் நடந்தது.

உற்சவத்தின் நிறைவு நாளான, இன்று (ஆக., 2ல்) காலை, 7:00 மணி முதல், நவாவரண பூஜை, ஹோமம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, மகா  பூர்ணாஹுதி, தீபாராதனை, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.ஆடிப்பூர  திருவிழாவான நாளை (ஆக., 3ல்) காலை, 7:00 மணிக்கு, அராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, வளைகாப்பு அலங்காரம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !