உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு துவக்கம்

தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு துவக்கம்

மதுரை: தும்பைப்பட்டி,  சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன்,  சங்கரநாராயணர் கோவிலில், 19-ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழா இன்று (2ம் தேதி) காப்பு கட்டுடன் துவங்கியது.

இதை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கோவிலில், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நாளான வரும் 13.08.2019 செவ்வாய் கிழமை,  சுவாமி சங்கர நாராயணராக, அம்பாளுக்கு காட்சி தரும் வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.   அன்றைய தினம் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள்,  பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும்.   அன்று சுவாமிகளுக்கு சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெறும்.  முன்னதாக இன்று காலையில், நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள்  இன்று காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.   ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், தேவதாஸ்,  செல்வம்,  ராசு, பாண்டி, அங்கப்பன், மோகன்தாஸ், சிவராமன், சீனிவாசன்,  சங்கர மூர்த்தி,  ராஜா,  கருணாநிதி,  குருசாமி உள்ளிட்ட விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !