உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழவந்தாங்கல் வேம்புலியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

பழவந்தாங்கல் வேம்புலியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

பழவந்தாங்கல்:வேம்புலி அம்மன் கோவில் தீமிதிதிருவிழா, இன்று  (ஆக., 2ல்) துவங்குகிறது. பழவந்தாங்கலில், வேம்புலி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 26ம் ஆண்டு தீமிதி திருவிழா, இன்று (ஆக., 2ல்) காலை, கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.காலை, 5:30 மணிக்கு கங்கை திரட்டல், 6:00 மணிக்கு, அபிஷேகம்,  7:30 மணிக்கு காப்பு கட்டுதல், 9:00 மணிக்கு, எல்லை கட்டுதல், மதியம், 12:00  மணிக்கு, கரகம் வீதி உலா, இரவு, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற  உள்ளது.நாளை (ஆக., 3ல்) காலை, 7:30 மணிக்கு அக்னி சட்டியுடன், உற்சவர்,  குளக்கரையிலிருந்துஆலயம் வருதல்; சிறப்பு அபிஷேகம் நடைபெற  உள்ளன.விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, 4ம் தேதி மாலை நடக்க  உள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து, நேர்த்திக் கடன்  செலுத்துவர் என, ஆலய நிர்வாகிகள்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !