சென்னையில் ஹஜ் யாத்திரை 423 பேர் பயணம்
ADDED :2274 days ago
சென்னை:புனித ஹஜ் பயணத்திற்காக, சென்னையில் இருந்து, 423 பேருடன், முதல் விமானம், நேற்று முன்தினம் (ஜூலை., 31ல்) இரவு புறப்பட்டு சென்றது.
சவுதி அரேபியாவில் உள்ள, மக்கா நகருக்கு, ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் இருந்து, ஆயிரக் கணக்கானோர், புனித யாத்திரை செல்வது வழக்கம்.இந்தாண்டு, புனித பயணம் செல்ல, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து, 4,464 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
புனித ஹஜ் பயணத்திற்காக, சென்னையில் இருந்து, முதல் தனி விமானம், நேற்று முன் தினம் (ஜூலை., 31ல்) இரவு, 11:40 மணிக்கு, சவுதி அரேபியாவின், ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில், ஒரு குழந்தை, 213 பெண்கள் உட்பட, 423 பேர் பயணம் செய்தனர்.அவர்களை, ஹஜ் கமிட்டி நிர்வாகிகள், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.