உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், இலவச கீதை வகுப்புகள்

சென்னையில் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், இலவச கீதை வகுப்புகள்

சென்னை:கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சிறார், பெரியோருக்கான, இலவச  பகவத் கீதை போதனை வகுப்புகள், துவக்கப்பட உள்ளன.

கிருஷ்ண பக்தி இயக்கம் எனும், ’இஸ்கான்’ சார்பில், சிறார், பெரியோருக்கு,  ஆன்மிக போதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக,  சென்னை அசோக்நகர், அபிராமபுரம் பகுதியில், இலவச பகவத்கீதை போதனை  வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.

அசோக் நகர், எண், 24/3, இந்திரா நகர்,  மூன்றாவது தெருவில், நாளை முதல், ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை, 5:30  மணி முதல் இரவு, 7:30 மணி வரை, சிறார், பெரியோருக்கு இலவசவகுப்புகள்  நடத்தப்படுகின்றன.மேலும் விபரங்களுக்கு, -97911 61439 என்ற மொபைல்  எண்ணை தொடர்பு கொள்ளலாம்.அபிராமபுரம், எண், 2/37, பிரித்திவி அவென்யூ,  இரண்டாவது தெருவில், ஆக., 7ம் தேதி முதல், ஒவ்வொரு புதன்கிழமையும்,  காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, பெரியோருக்கான  வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாலை, 5:00  மணி முதல், இரவு, 6:30 மணி வரை, சிறார்களுக்கு இலவச வகுப்புகள்  நடத்தப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, 98400 34498 என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம்.இந்த வகுப்பில், பக்தி யோகம், ஹரி நாம சங்கீர்த்தனம்,  பகவத் கீதை உள்ளிட் டவை கற்றுத்தரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !