உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அன்னுார் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அன்னுார்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு  வழிபாடு நடந்தது.

பிள்ளையப்பன்பாளையம், செல்வநாயகியம்மன் கோவிலில், அம்மனுக்கு மதியம்  அபிஷேக மும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னுார், தென்னம்பாளையம்  ரோடு, மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 1ல்) மதியம் மாரியம்மனுக்கு, அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது.

அன்னுார், பெரியம்மன் கோவிலில், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மதியம் குல தெய்வத்தார் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னுார், மன்னீஸ்வரர் கோவில், அருந்தவச்செல்வி அம்மன் சன்னதியில், அமாவாசையை முன்னிட்டு அபிசேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம்: ஆடி அமாவாசையான நேற்று,  (ஆக., 1ல்) மேட்டுப்பாளையம் வனபத்ர காளிம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஆடி அமாவாசையான நேற்று (ஆக., 1ல்),மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீராடி, பவானிஆற்றங்கரையோரம், தங்களது மூதாதையர்களுக்கு பிண்டம் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.

சூலுார்: மேற்கு அங்காளம்மன் கோவில், சிவன் கோவில், பெரியமாரியம்மன் கோவில், மேற்கு மாகாளியம்மன் கோவில், காட்டூர் மாகாளியம்மன், அத்தனுார் அம்மன் கோவில். முத்துக்கவுண்டன்புதுார் அங்காளம்மன் கோவில், நீலம்பூர் வேடசாமி கோவில், சென்னி யாண்டவர் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கோவில்களில். ஆடி அமாவாசையை ஒட்டி, காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தன. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !