கோவையில் புனித பயணத்துக்கு அரசு நிதியுதவி
ADDED :2275 days ago
கோவை:கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்காக, தமிழக அரசு, நபருக்கு, 20,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. அனைத்து பிரிவினரை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் 600 பேர், புனித பயணம் செல்வதற்கு நிதி வழங்கப்படும். இப்பயணம், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும், உள்ளடக்கியதாக இருக்கும். அக்.,2019 முதல் மார்ச் 2020 வரை, இந்த புனித பயணத்தை மேற்கொள்ளஉத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள். விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக த்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம். என்று, கோவை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.