உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பெரும்பாக்கத்தில், பழண்டியம்மன் கோவில் ஆடிப்பூர விழா

சென்னை பெரும்பாக்கத்தில், பழண்டியம்மன் கோவில் ஆடிப்பூர விழா

சென்னை:பெரும்பாக்கத்தில், பழண்டியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற  இக்கோவி லில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத திருவிழா, வெகு விமரிசையாக  கொண்டாடப்படுகிறது.


இந்த ஆண்டு, ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (ஆக., 3ல்) காலை, ஆடிப்பூர விழா நடக்க உள்ளது. இதில், அம்மனுக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகமும், சிறப்பு வளையல் அலங்காரமும், பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற உள்ளது.  

குழந்தை இல்லாத தம்பதியினர், ஆடிப்பூரம் தினத்தில், இக்கோவிலில் வழிபடுவது  சிறப்பாக கருதப்படுகிறது.ஆடிப்பூர விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில்  அறங்காவலர், ராஜசேகர், ஆலய அர்ச்சகர், பாலாஜி மற்றும் நிர்வாகிகள்  செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !