உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

விருத்தாசலம விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

விருத்தாசலம: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர  தேரோட்டத்தை யொட்டி விருத்தாம்பிகை அம்மன் தேரில் வீதியுலா வந்து  அருள்பாலித்தார்.

விருத்தாசலம் பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மன் உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் கியது. தினசரி காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டி கேஸ்வரர் உள்ளிட்ட  பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு கிளி, பூதம், யானை,  வெள்ளி ரிஷபம், கமல வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று (ஆக., 2ல்)  தேரோட்டத்தையொட்டி, காலை 4:30 மணியளவில் விருத்தாம்பிகை அம்மனுக்கு  பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால்  சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், காலை 6:05 மணிக்கு தேரோட்டம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.தொடர்ந்து, இன்று ஸ்படிக பல்லக்கில் அம்மன் வீதியுலா, நாளை  (4ம் தேதி) அதிகாலை 4:30க்கு மேல், 6:00 மணிக்குள், நுாற்றுக்கால்  மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !