சோமவாரப்பட்டி வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், ஆடிப்பூர சிறப்பு பூஜை
ADDED :2293 days ago
உடுமலை:சோமவாரப்பட்டி வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி, இன்று (ஆக., 3ல்) சிறப்பு பூஜைகள் நடக்கிறது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த, வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், இன்று (ஆக., 3ல்), ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் மற்றும் தமிழ் மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அதிகாலை முதல் சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருவாய்மொழி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், மகா தீபாராதனை உட்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.