திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருவிழா
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நாளை(ஆக.,4) ஆடிப்பூர திருவிழா நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம் பிகை எழுந்தருள்வார். அம்பாள் முன் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்படும். கிரிவலப்பாதையில் உள்ள பத்ரகாளி யம்மன் கோயில் மூலவருக்கு வளையல் அலங்காரம் பூஜைகள் முடிந்து கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து 5 வகை பிரசாதம் வழங்கப்படும். எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயில் மூலவர், திருநகர் சித்தி விநாயகர் கோயில் மீனாட்சி அம்மன், விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் மூலவர் விசாலாட்சி அம்பாள், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு வளையல்கள் அலங்காரமாகி பூஜை நடக்கும்.