செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா
ADDED :2294 days ago
பாகூர், சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது.
சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு வீதியுலா நடைபெற்றது.விழாவின், முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு, செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் செடல் போட்டு கொண்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, செங்கழுநீர் மாரியம்மன், அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலாவாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.