உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் மாகாளியம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா

வெள்ளகோவில் மாகாளியம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா

வெள்ளகோவிலில் மாகாளியம்மனுக்கு காலை ஆடிப்பூரத்திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அணிந்து சிறப்பு பூஜை நடந்தது. ஆடி பூர நட்சத்திரத்தில் காலை 6 மணி அளவில் மாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடந்தது. பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாகாளியம்மன் கோவில் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !