உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாளுக்கு மதுரை மங்கலப் பொருட்கள்

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு மதுரை மங்கலப் பொருட்கள்

 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் கோவிலில், இன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது, ஆண்டாள் சாற்றுவதற்கு, திருச்சி, ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் மற்றும் மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து, பரிவட்டங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில் இருந்து, இணை ஆணையர், ஜெயராமன், அறங்காவலர்கள் ரெங்காச்சாரி உள்ளிட்டோர் தலைமையில், பட்டு, வஸ்திரம், மாலை மற்றும் மங்கலப் பொருட்கள், ஆண்டாள் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவர்களை, ஆண்டாள்கோவில் தக்கார், ரவிசந்திரன், செயல்அலுவலர், இளங்கோவன் மற்றும் கோவில் பட்டர்கள் வரவேற்றனர். பின், அந்த மங்கலப் பொருட்கள், ஆண்டாளுக்கு சாற்றபட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதேபோல், மதுரை, கள்ளழகர் கோவில் சார்பிலும், பரிவட்டங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !