பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூச்சு
ADDED :2295 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் பூச்சு நடந்தது.காலை 8:30 மணிக்கு கோயில் வளாகத்தில் கூடிய பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைக்கத் துவங்கினர். தொடர்ச்சியாக பெண்கள் அரைத்த பின் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.மஞ்சள் பூசப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சந்தனக் காப்பில் அம்மன் காட்சியளித்தார்.