வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
விழுப்புரம்: ஆடிபூரத்தை யொட்டி, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிப்பூரத்தை யொட்டி, விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு, வைகுண்டவாச பெருமாள், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் நடந்தது. பின், தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.அதே போல், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, திருநகரில் உள்ள மகாலட்சுமி ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவிலில் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு, தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், 9.00 மணிக்கு தாயார் மற்றும் உற்சவருக்கு வளையல் அலங்காரம் நடந்தது. பின், மாலை 6.00 மணிக்கு, அலங்கார சிறப்பு தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின், கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு, சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது.