காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா
ADDED :2297 days ago
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மன் வளைகாப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இந்த விழாவில் பங்கேற்ற பெண்கள் அம்மனை தரிசித்தனர். இதில் திருமணமாகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டி அம்மனுக்கு சாத்திய வளையலை பெற்றனர். குழந்தை பேறு இல்லாத பெண்களும் அதிகளவில் வாங்கி சென்றனர். ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 9 வித அபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.