உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் ரேணுகாம்பாள் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம் ரேணுகாம்பாள் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில், 97வது ஆண்டு செடல் உற்சவம் நடந்தது.

விழா கடந்த 25ம் தேதி, கொடியேற்றம் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தின மும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 1 ம் தேதி பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.சிறப்பு விழாவான செடல் உற்சவத்தன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம் 2.00 மணிக்கு காத்தவராயன் கழுகு மரம் ஏறுதலும், மாலை 5.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் 3 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !