பெண்ணாடம் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர வழிபாடு
ADDED :2297 days ago
பெண்ணாடம்: ஆடிப்பூரத்தையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில், மூலவர் வேத நாராயண பெருமாள், வேதவல்லி தாயார் சுவாமிக்கு, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணியளவில் அம்பாளுக்கு வளையல் அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. வேதவல்லி தாயார் ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.