திருப்போரூர் தண்டுமாரியம்மன் கோவில்களில் தீ மிதி விழா
ADDED :2298 days ago
திருப்போரூர் : சிறுதாவூர், பாலாட்டம்மன், தண்டுமாரியம்மன் கோவில்களில், இன்று (ஆக., 5ல்), தீ மிதி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.திருப்போரூர் அடுத்த, சிறுதாவூரில், பாலாட்ட ம்மன், தண்டுமாரியம்மன் கோவில்களில், இந்தாண்டு ஆடித்திருவிழா, 2ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் காப்புக்கட்டுதலுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் (ஆக., 3ல்), அம்மன் குட ஊர்வலம் நடந்தது. நேற்று (ஆக., 4ல்) காலை, 9:00 மணிக்கு, அம்மன்களுக்கு கூழ் வார்த்தல் நடந்தது.இன்று (ஆக., 5ல்) மாலை, 5:00 மணிக்கு, பிரதான விழாவாக தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தியுடன் விரதமிருந்து, மஞ்சள் நிற உடைகளுடன் பிரார்த்தனையாக தீ மிதிக்கின்றனர்.